வட கொரிய அதிபரின் ரகசியமான குடும்ப வாழ்க்கை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இன்றுவரை ரகசியம் காத்து வருகிறார்.

தனது தந்தை கிம் ஜாங்-இல்லின் மறைவுக்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற இவர், சர்வாதிகார ஆட்சி மேற்கொண்டு வருவதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் தற்போது வரை தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

நாட்டு மக்கள் வறுமைகோட்டிற்கு கீழ் இருந்தாலும், வெளி உலகத்திற்கு தனது நாடு செழிப்புடன் மற்றும் வலிமையுடன் இருக்கிறது என்பதை காட்டிக்கொள் அணு ஆயுத சோதனையை நடத்தி உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியை கொடுத்த இவர், சமீபத்தில் சீனாவில் மேற்கொண்ட சுற்றப்பயணத்திற்கு பின்னர், அணு ஆயுத சோதனை நடத்தமாட்டேன் என கூறினார்.

இவரது நாட்டில் நடக்கும் சில விடயங்கள் வெளி உலகத்திற்கு தெரியா வண்ணம் ரகசியம் காப்பது போன்று, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தன் நாட்டு மக்களிடமே இவர் ரகசியம் காத்து வருகிறார்.

குடும்ப வாழ்க்கை

ரி சோல் ஜு என்ற பாப் பாடகியை கிம் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இவர் ஒரு பாப் பாடகி என்ற தகவலை தவிர வேறு எந்த தகவல்களும் இதுவரை வெளியாவில்லை.

வட கொரியாவில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் ரி சோல் ஜு பாடுகையில், அவரது குரலில் மயங்கிய கிம், காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடைபெற்ற பின்னரும், இவர் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கிம் தமது மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் 9 மாதங்கள் தொடர்ந்து ரி - வை கண்காணித்து வந்துள்ளார். இதனால் சுமார் 1 ஆண்டாக வெளி உலகத்திற்கு தலைகாட்டாமல் ரி இருந்துள்ளார்.

பொதுவாக ரி சோல் ஜூ, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்தே வருவார் என கூறப்படுகிறது.

இவர் ஒன்றும் முதல் காதலி கிடையாது. இதற்கு முன்னர் வடகொரியாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் ஹயோன் சாங் வோல் என்பவரை கிம் காதலித்து வந்துள்ளார்.

சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கிம் ஜாங் உடன் நெருக்கமாக பழகியுள்ளார். இவர்களது காதல் கிம் தந்தைக்கு தெரியவந்ததையடுத்து இந்த உறவு முறிந்தது.

இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பாலியல் வீடியோ ஒன்றை தயார் செய்தார் என்ற குற்றத்திற்காக அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியானது.

ஆனால், இவர் இறக்கவில்லை என்றும் இவருக்கு ஆளும் கொரியா தொழிலாளர்கள் கட்சியில் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் அதிகாரம் படைத்த பதவியை கிம் வழங்கியுள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்