ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: தண்ணீர் மற்றும் மின்சார சேவைகள் பாதிப்பு

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, தண்ணீர் மற்றும் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதம் எதுவுமில்லை என்றாலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

டோக்கியோ நகருக்கு 800 கிலோமீற்றர்கள் மேற்கில் Ohda நகரின் அருகே நிலப்பரப்பிற்கு கீழே 12 மீற்றர்கள் கீழே 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் சாலைகளில் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சேவை பாதிக்கப்பட்டுள்ளது, பல வீடுகளில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஏஜன்சி தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்