தென்கொரியாவை அதிரச் செய்த தமிழ் குரல்கள்

Report Print Gokulan Gokulan in ஏனைய நாடுகள்

தென்கொரியாவை சேர்ந்த தமிழர்கள் சிறு சிறு குழுக்களாக திரண்டு அந்நாடு முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தப் போராட்டங்கள் தென்கொரியாவின் வடக்கிலிருந்து தெற்கு வரைக்கும் ஆங்காங்கே நடைபெற்றது.

நிகழ்வில் பதாகை பிடித்தும் மற்றும் உறுதிமொழி தீர்மானம் நிறைவேற்றியும் தமிழகம் காக்க தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

சோல், சுஒன், தேஜான், தேகு, பூசான் , சுன்ச்சோன், கொஜே தீவு, சொஞ்சூ, சொனான் மற்றும் உல்சான் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

பிறகு இந்த ஆர்பாட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மதிப்பிற்குரிய உச்ச நீதி மன்றம் உறுதி செய்வது, தமிழகத்தில் உணவு உற்பத்தி செய்யும் இடமான தஞ்சை மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் ,

ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக மூடுவது, நியுட்ரினோ திட்டத்துக்கான முழு விளக்கம் தெரிவிக்கும் வரை அதை செயல்படுத்தக் கூடாது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"அறத்தின் வழி வந்த மூத்தோர் நாங்கள். அறிவு உலகின் விதைகள் நாங்கள் தீமையின் கொடுநாவை பொசுக்கும் வேங்கைகள் உயிர்கள் அனைத்திற்கும் தமிழர் காவல் ஞானியர் பேரொளியும் இயற்கையின் வலிமையும் உலகோர் நட்பும் எமக்கு அரணாய் அமையும்."

என்கிற அவர்களின் உறுதி மொழி அத்தனை புரட்சிகரமாகவும் தமிழ் உணர்வை தூண்டுமாறும் இருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்