விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்து: பிரித்தானியர்கள் உள்ளிட்ட 50 பேர் படுகாயம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மால்டாவில் சுற்றுலாப்பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியர் உள்ளிட்ட 50 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

மால்டாவின் Zurrieq பகுதியில் இரட்டை அடுக்குப் பேருந்து ஒன்றில் பெல்ஜியம் மற்றும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் சென்றுள்ளனர்.

அப்போது தாழ்வாக இருந்த மரக்கிளை ஒன்றில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் 62 வயது பெல்ஜியம் நாட்டு ஆண் ஒருவரும் 37 வயது ஸ்பெயின் நாட்டு பெண்மணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மட்டுமின்றி 3 பிரித்தானியர்கள் உள்ளிட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எந்த நாட்டவர் என்ற தகவல் அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை என தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்தவர்கள் 30 பேரை அருகாமையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அதிகாரிகள் மீட்டு சேர்ப்பித்துள்ளனர்.

மேலும் காயமடைந்த 19 பேரை மீட்டு பொது சுகாதார மையத்தில் சேர்ப்பித்துள்ளனர்.

குறித்த பேருந்தை இயக்கிய 24 வயது ஓட்டுநருக்கு இதுவே முதல் பயணம் எனவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்