கூட்டுப்படைகளின் வான்வழி தாக்குதலுக்கு பின்னர் எப்படி இருக்கிறது சிரியா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
933Shares
933Shares
ibctamil.com

அமெரிக்க கூட்டுப்படைகளின் வான்வழி தாக்குதலுக்கு பின்னர் சிரியாவின் ரசாயன ஆலை தொடர்பில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோவை சிரியா நாட்டு தேசிய செய்தி ஊடகம் ஒன்றே உறுதிப்படுத்திய பின்னர் வெளியிட்டுள்ளது.

அதில் சிரியாவின் முக்கிய ரசாயன ஆலை ஒன்று சிதைந்து சுக்கலாகியுள்ளதும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் முற்றிலுமாக சிதைந்து போயிருந்தது.

மட்டுமின்றி இடிபாடுகளின் அருகே மிகவும் பரிதவிப்புடன் நிற்கும் நபர் ஒருவர் தீயணைப்பு வீரர்களுக்கு உத்தரவிடுகிறார்.

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து சிரியாவின் 3 முக்கிய ரசாயன ஆலைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன.

கடந்த வாரம் சிரியா ராணுவம் மேற்கொண்ட நச்சு வாயு தாக்குதலில் சிறார்கள் உள்ளிட்ட 75 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையிலேயே குறித்த தாக்குதலை அமெரிக்க கூட்டுப்படைகள் முன்னெடுத்துள்ளன.

3 நாடுகளும் இணைந்து ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளன.

இது சிரியா வான்வெளியில் கடந்த ஆண்டு அமெரிக்கா மேற்கொண்ட வான்வழி தாக்குதலை விட இருமடங்காகும்.

பிரித்தானியா நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் குறித்த வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் திட்டமிட்டப்படி நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, குறித்த தாக்குதலை விட சிரியாவின் கொட்டத்தை அடக்க வேறு வழி தெரியவில்லை என பிரித்தானிய பிரதமர் மே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ராணுவம் சார்பில் இதுவரை எத்தனை ஏவுகணைகள் வீசப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை,

ஆனால் அமெரிக்க கூட்டுப்படைகள் வீசிய 103 ஏவுகணைகளில் 71 எண்ணத்தை தடுத்து நிறுத்தி எதிர் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் முக்கிய கல்வி நிலையம் ஒன்றும், அதனை ஒட்டிய சில ஆய்வுக் கூடங்களும் முற்றாக சேதமடைந்துள்ளதாக சிரியா தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்