வடகொரியாவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துவேன்: கடும் சித்ரவதைக்கு தப்பிய இளம்பெண் ஆவேசம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
426Shares
426Shares
lankasrimarket.com

அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் வடகொரியாவின் கொடூர முகத்தை அம்பலப்படுத்துவேன் என அங்கிருந்து உயிர் தப்பிய இளம்பெண் ஒருவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சீனா வழியாக தென் கொரியாவில் அடைக்கலம் தேடியுள்ள 26 வயது Danbi Kim என்ற இளம்பெண்ணே தமக்கு நேர்ந்த கொடுமைகளையும், தாம் நேரில் பார்த்த கொடூரங்களையும் வெளிப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளவர்.

வாழ்நாளில் எந்த சிறார்களுக்கும் அப்படி ஒரு காட்சியை காணும் நிலை ஏற்பட கூடாது என கூறும் அவர்,

தமது 10 வயதில் முதன் முறையாக வடகொரிய ராணுவத்தினர் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினரை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளதை நினைவு கூர்ந்துள்ளார்.

மட்டுமின்றி பல மணி நேர கொடூர சித்ரவதைக்கு பின்னர், அவர்களை வடகொரிய ராணுவம் கொலை செய்துள்ளதாகவும், நாட்டைவிட்டு வெளியேற முயன்றதாக அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கே அதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் பின்னாளில் அதே கொடூர சித்ரவதைக்கு தாமும் இரையானதாக கூறும் டேன்பி கிம், அந்த 25 நாட்களை தாம் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு இதுவரை வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. அங்குள்ள குடிமக்களான தன்னைப்போன்றவர்களுக்கு மட்டுமே வடகொரியாவின் கொடூர முகம் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஆட்சியாளர்களின் சூழ்ச்சியால் சிறையில் அடைக்கப்பட்ட தமது சகோதரருக்காக, தமது இறுதி மூச்சு உள்ளவரை வடகொரியா தொடர்பில் தகவல்களை உலக மக்களுக்கு தெரியப்படுத்துவேன் எனவும் டேன்பி கிம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்