விமானப் பணிப்பெண்ணை பிணைக்கைதியாக்கிய பயணி: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
232Shares
232Shares
lankasrimarket.com

சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டுச் சென்ற விமானம் ஒன்றில் பயணி ஒருவர் பேனா முனையில் விமானப் பணிப்பெணை மிரட்டி பிணைக்கைதியாக சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து ஏர் சீனா விமானம் CA1350 Zhengzhou பகுதிக்கு திருப்பி விடப்பட்டது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சங்சா விமான நிலையத்தில் இருந்து தலைநகர் பீஜிங் நோக்கி CA1350 எண் கொண்ட ஏர் சீனா விமானமானது இன்று காலை புறப்பட்டு சென்றது.

காலை 11 மணியளவில் அந்த விமானம் பீஜிங் நகரை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 10 மணியளவில் Zhengzho நகர விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி,

எக்சிகியூட்டிவ் கிளாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தை வைத்து விமானப்பணிப் பெண்ணை சிறைபிடித்து வைத்து, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மிரட்டி வருவதாக தெரிவித்து, அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார்.

இதையடுத்து, Zhengzho விமான நிலையத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏராளமான பொலிசாரும், பாதுகாப்பு மற்றும் அதிரடிப் படையினரும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் குவிக்கப்பட்டன.

அந்த விமானம் தரையிறங்குவதற்குள் பணிப்பெண்ணை சிறைபிடித்து வைத்திருந்த நபர்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி அவரை விடுவித்ததாக தெரிகிறது.

அப்போது, அந்த மர்மநபர் பேனா முனையை பணிப்பெண்ணின் கழுத்தில் வைத்து மிரட்டிய விபரம் தெரியவந்துள்ளது.

பிடிபட்ட நபர் யார்? இந்த நாடகம் எதற்காக நடந்தது? என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியிடப்படாத நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தின் மூலம் பீஜிங் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்