மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தினால் இது தான் நடக்கும்: புடின் காட்டமான எச்சரிக்கை

Report Print Athavan in ஏனைய நாடுகள்
2360Shares
2360Shares
ibctamil.com

மேற்கத்திய நாடுகள் மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தினால், சர்வதேச உறவுகள் பாதிக்கப்பட்டு, உலகளாவிய குழப்பம் ஏற்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரத்தில் சிரியாவில் உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில், அந்நாட்டு ராணுவம் நடத்திய ரசாயனத் தாக்குதலை காரணம் காட்டி, சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள சிரியாவின் ராணுவ முகாம்களின் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே பேசும் போது சிரியா அதிபர் அசாத் உற்பத்தி செய்யும் ரசாயன ஆயுதங்களுக்கு மூலப் பொருட்கள் வழங்கி வரும் நிறுவங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் மீது "Face the Nation" எனும் திட்டத்தின் கீழ் புதிய பொருளாதார தடை விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள போவதாக அறிவித்திருந்தார்.

அடுத்ததாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெற வேண்டாம் என்றும், அதற்கு மாறாக நீண்ட காலம் அங்கு தங்கி இருக்குமாறும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிபிடம் எடுத்துகூறி சம்மதிக்க வைத்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று ரஷ்யாவின் தலைமைப் பீடமான கிரெம்லின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிரியா தாக்குதல்களை முன்வைத்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்கிறது.

சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக ரஷ்யா கடந்த ஏழு வருடமாக முன்னெடுத்து வந்த அரசியல் ரீதியிலான முயற்சியை மேற்கத்திய நாடுகளின் ஏவுகனை தாக்குதல் பாரிய சேதத்தை ஏற்படுத்தி பாழாக்கிவிட்டது.

மேலும், சிரியா மீது மீண்டும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது உலகளாவிய குழப்பத்தை விளைவித்து உலக நாடுகளுக்கு இடையில் உள்ள ராஜாங்க ரீதியிலான உறவை கடுமையாக பாதிக்கும் என்று விளாடிமிர் புடின் காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியா தாக்குதல் குறித்து ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியிடம் புடின் தொலைபேசி வாயிலாக ஆலோசித்த பின்னர் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாகவே மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவிற்கும் எதிரான மோதல் வெளிப்படையாக முற்றிவருவது உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்