வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி: வீடியோ வெளியானது

Report Print Santhan in ஏனைய நாடுகள்
96Shares
96Shares
lankasrimarket.com

மெக்சிகோவில் திருமண நிகழ்வின் போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த விருந்தினர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடியுள்ளனர்.

மெக்சிகோவின் Zapopan பகுதியில் உள்ள Hacienda Benazuza ஹோட்டலில் திருமணம் முடிந்த நிலையில் அன்றிரவு மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர், அப்போது புதுமணத் தம்பதிகள் விருந்தினர்கள் முன்னிலையில் நடனம் ஆடியுள்ளனர்.

அப்போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த விருந்தாளிகள் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.

தீ அதிவேகாம முழுவதும் பரவியதால், உள்ளே இருந்த 300-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடியுள்ளனர்.

இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் உள்ளூர் ஊடகம் ஒன்று வானவேடிக்கைக்காக பட்டாசுகள் கொளுத்தப்பட்ட போது ஏற்பட்ட விபத்தின் காரணமாகவே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாகவும், தீ விபத்தின் காரணமாக ஹோட்டல் அறையின் ஒரு பகுதியே முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், யாருக்கும் காயம் மற்றும் உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்