சிரியாவுடன் போரில் குதிக்கும் வடகொரியா: உலகப் போரின் விளிம்பில் உலகம்!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலை அடுத்து சிரியாவுக்கு ஆதரவாக அதிரடியாக களமிறங்கியுள்ளார் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்.

சிரியா மீது அமெரிக்க கூட்டுப்படைகளின் அதிரடி தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள கிம் ஜாங் உன், மேற்கத்திய சக்திகளை எதிர்கொள்ள சிரியாவுடன் இணைந்து போராட இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு வடகொரியா தயாராகி வரும் நிலையில், கிம் ஜாங் உன் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி முடிவானது சர்வதேச பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க கூட்டுப்படைகளின் கண்மூடித்தனமாக தாக்குதலை துணிவுடன் எதிர்கொண்டு சிரியாவின் இறையாண்மையை பாதுகாத்தமைக்காக சிரியா ஜனாதிபதி ஆசாத்துக்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துள்ளதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆசாத்துக்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமது பாராட்டுதலை தெரிவித்துள்ளது மட்டுமின்றி மேற்கத்திய சக்திகளை முறியடிக்க சிரியாவுடன் இணைந்து போராட இருப்பதாக தனது சம்மதத்தையும் கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளதாக அந்த செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் சிரியாவின் 72-வது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ள கிம் ஜாங் உன், அமெரிக்கா கூட்டுப்படைகளுக்கு எதிராக சிரியா மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வடகொரியா ஆதரவாக இருக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

துணிவான தலைமையின் கீழ் எந்த நாடும் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் என தெரிவித்துள்ள கிம் ஜாங் உன், சிரியா மக்களை இந்த இக்கட்டான காலத்தில் வழி நடத்த தகுதியான தலைவர் ஆசாத் மட்டுமே எனவும் புகழ்ந்துள்ளார்.

அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு பின்னர் ரஷ்யா உடனடியாக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில், சர்வதேச பார்வையாளர்கள் வடகொரியாவின் நிலை குறித்து ஏற்கெனவே எச்சரிக்கை செய்திருந்தனர்.

சிரியாவுடன் அப்போதிருந்தே நட்பு பாராட்டி வரும் வடகொரியா, ஏப்ரல் 13 ஆம் திகதி நடந்த தாக்குதலுக்கு பின்னர் வெளிப்படையாக ஆதரவை தெரிவிக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

2016 ஆம் ஆண்டு முதல் இதுவரை வடகொரிய சிறப்பு குழுவானது 3 முறை சிரியா சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்