பசிபிக் நெருப்பு வளையம் என்பது என்ன! சுனாமி, நிலநடுக்கம் ஏற்படுவது எப்படி?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சமீபத்தில் கலிபோர்னியாவில் தொடர்ந்து மூன்று நில நடுக்கங்களும் ஓக்லஹோமா அலாஸ்கா, நெப்ராஸ்கா மற்றும் டெக்சாஸில் நில நடுக்கங்களும் ஏற்பட்டதில் அமெரிக்காவே குலுங்கியது.

2008 ஆம் ஆண்டில் அமெரிக்க நிலவியல் ஆய்வு ஒன்று கலிபோர்னியா நெருப்பு வளையத்தின்மீது அமைந்திருப்பதால் அதை சிறிது காலத்திற்குள் மாபெரும் பூகம்பம் ஒன்று தாக்கும் என்று எச்சரித்திருந்தது.

அலாஸ்காவும் அந்த நெருப்பு வளையத்தின்மீதுதான் அமைந்துள்ளது.

சரி, இந்த நெருப்பு வளையம் என்பது என்ன? அதற்கும் நில நடுக்கத்திற்கும் என்ன தொடர்பு?

நெருப்பு வளையம் என்பது பசிபிக் பகுதியில் 450 எரிமலைகளைக் கொண்ட ஒரு பகுதி. உலகின் பயங்கர எரிமலைகளில் பெரும்பான்மை இந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளன.

உலகின் 90 சதவிகிதம் நில நடுக்கங்களும் 80 சதவிகிதம் பெரிய நில நடுக்கங்களும் இந்தப் பகுதியில்தான் ஏற்படுகின்றன.

40,000 கிலோமீற்றர் நீளமான குதிரை லாட வடிவமுடைய இந்த நெருப்பு வளையம் நியூஸிலாந்து தொடங்கி ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரைகள் வழியாக சிலியில் முடிவடைகிறது.

இந்த நெருப்பு வளையத்தினால் பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள நாடுகள் அமெரிக்க மேற்கு கடற்கரை, சிலி, ஜப்பான் மற்றும் சாலமோன் தீவுகள் உட்பட்ட நாடுகள் ஆகும்.

AFP

பூமி பார்ப்பதற்கு ஒரே உருண்டையாக காணப்பட்டாலும் அது நிலத்தின் ஆழப்பகுதியில் டெக்டானிக் தட்டுகள் எனப்படும் நகரும் தன்மையுள்ள தட்டுக்களால் ஆனது.

பூமியின் உட்கருவில் உள்ள உருகிய குழம்பிலிருந்து தோன்றும் ஆற்றலானது, இந்த டெக்டானிக் தட்டுகளை நகரச் செய்வதால் அவை ஒன்றுடன் ஒன்று மோதி உராய்வை ஏற்படுத்துகின்றன.

இந்த உராய்வினால் ஏற்படும் ஆற்றல் இறுதியாக வெளியேறும்போது நில நடுக்கத்தை உண்டாக்குகிறது, இதே கடலில் ஏற்பட்டால் சுனாமி ஏற்படுகிறது.

டெக்டானிக் தட்டுகள் பொதுவாக மெதுவாகத்தான் நகரும் என்றாலும் நில நடுக்கத்தின்போது அவை மிக வேகமாக, வினாடிக்கு பல மீற்றர்கள் வேகத்தில் நகர்கின்றன.

De Agostini Editorial)

இந்த நெருப்பு வளைய பகுதியில் நில நடுக்கம் மற்றும் எரிமலை நிகழ்வுகள் கிட்டத்தட்ட தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் வாழ்பவர்களுக்கு எப்போதுமே ஒரு அபாயம் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

1964 ஆம் ஆண்டு அலாஸ்காவில் 9.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அலைகள் 100 மீற்றர் உயரத்திற்கு எழுந்தன. 131 பேர் கொல்லப்பட்டனர்.

2017 ஆம் ஆண்டு கிழக்கு தைவானில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவுள்ள ஒரு நில நடுக்கத்தால் 17 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

@lastquake/Twitter
USGS
USGS

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்