சர்வதேச ஆய்வாளர்களின் சிரிய ஆய்வு ஒத்திவைப்பு: துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

சர்வதேச ஆய்வாளர்கள் சிரியாவில் ரசாயனத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் மேற்கொள்ள இருந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ரசாயன ஆயுதங்கள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ரசாயனத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு செல்வதற்கு முன்பு அங்கு நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக நேற்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவினர் டூமாவுக்கு சென்றனர்.

எதிர்ப்பாளர்கள் அவர்களை வழி மறித்ததாகவும் துப்பாக்கிச் சூடு கேட்டதாகவும் அதையடுத்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமை எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்து பின் நிலைமை பாதுகாப்பாக இருக்கிறது என்று முடிவு செய்யும் பட்சத்தில் ரசாயன ஆயுதங்கள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொள்வார்கள் என்று நேற்று சிரியாவின் ஐ.நா தூதர் தெரிவித்திருந்தார்.

ஐ.நா குழுவைச் சேர்ந்த ஒருவர் ரசாயன ஆயுதங்கள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தஆய்வாளர்கள் இன்று டூமாவுக்கு செல்ல மாட்டார்கள் என்று தெரிவித்தார். ஆனால் அவர் துப்பாக்கிச் சூடு குறித்த தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்