300 பேருக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

ஈராக்கின் பல்வேறு பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து ஈராக் அரசு நடத்திய போரில், தீவிரவாதிகளின் முக்கிய நகரமான மொசூலை கடந்த ஆண்டு ஈராக் அரசு கைப்பற்றியது.

இதனால், அதிகமான ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் பலர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 300 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஈராக் அரசு மரண தண்டனை விதித்துள்ளது. இதில் அதிகமான வெளிநாட்டு நபர்களும் உண்டு. தீவிரவாத இயக்கத்தில் இணைய வேண்டும் என்பதற்காக துருக்கி மற்றும் ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்து ஆண்கள், பெண்கள் உட்பட மொத்தம் 300 பேருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தண்டனையானது இரண்டு நீதிமன்றங்களால் வழங்கப்பட்டுள்ளது, ஒன்று மொசூல் நகர நீதிமன்றம் மற்றும் பாக்தாத் நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றங்கள் இணைந்து இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 11 பேர் ஈராக்கில் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகளிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில், அவர்கள் அளித்துள்ள வாக்குமூலங்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்து அவர்கள் செய்த சித்ரவதைகள் ஆகியவற்றினை அடிப்படையாக வைத்து இந்த தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்