திருமண நிகழ்வில் வான்வழித் தாக்குதல்: மணப்பெண்ணுடன் 20 பேர் பலி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மத்திய கிழக்கு நாடான ஏமனில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் மணப்பெண்ணுடன் சேர்ந்து 20 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏமனில் வடமேற்கு மாகாணமான ஹஜ்ஜவில் ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதலில் திருமண நிகழ்ச்சி பாதிப்புக்குள்ளானது.

இதில் மணப்பெண்ணுடன் சேர்ந்து 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 46க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் சிறார்கள் என கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

ஆனால், வான்வழித் தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று சவுதி அரேபியா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

ஏமனில் சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு al-Wahjiah கிராமத்தில் திருமண விழா ஒன்றில் சவுதி கூட்டுப்படைகள் வன்வழி தாக்குதல் நடத்தியதில் சுமார் 131 பேர் கொல்லப்பட்டனர்.

அதே ஆண்டு Sanaban கிராமத்தில் நடைபெற்ற மற்றும் ஒரு திருமண விழாவில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 43 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்