குழந்தைகளை கொத்தாக கொல்ல சிரியா திட்டம்: மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிரியாவில் ரசாயன தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் என மருத்துவர்களுக்கு அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் ரகசிய எச்சரிக்கையை மீறும் மருத்துவர்களின் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரசாயன தாக்குதல் நடத்தப்படவில்லை என அந்த நாட்டு அரசும், அதன் தோழமை நாடான ரஷ்யாவும் உறுதிபட தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் ரசாயன தாக்குதலுக்கு உள்ளான சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் எனவும்,

அரசின் ரகசிய உத்தரவை மீறும் மருத்துவர்களின் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் எனவும் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி ஆய்வு நடத்தும் அதிகாரிகளிடம் மருத்துவர்களே பொய் சாட்சியம் கூறவும் வற்புறுத்தப்படுவதாக அங்குள்ள மருத்துவர்கள் சமூக ஆர்வலர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers