கணவரின் குடும்பத்திடமிருந்து விவாகரத்து கோரிய மனைவி: வியப்பில் நீதிமன்றம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நைஜீரியாவில் ஐந்து ஆண்டுகளாக கணவர் எங்குள்ளார் என தெரியாமல் தவிக்கும் மனைவி, கணவர் குடும்பத்தார் தனக்கு விவாகரத்து தர வேண்டும் என நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

முசா தங்குடு என்பவருக்கும் ஹவா முசா என்ற பெண்ணுக்கும் கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த 2013-ல் முசாவை பொலிசார் கைது செய்து அழைத்து சென்றனர், பின்னர் அவர் பல சிறைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது எங்குள்ளார் என்றே தெரியாத நிலை உள்ளது.

இதையடுத்து உயர் பொலிஸ் அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளிடம் முசாவின் மனைவி ஹவா கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரித்தும் கணவர் குறித்து தகவல் கிடைக்கவில்லை.

இதையடுத்து தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ள ஹவா, கணவர் குடும்பத்தார் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும், கணவர் குடும்பத்தாரை தான் அதிகம் நம்பியும் எந்த பிரயோஜனமும் இல்லை என கூறியுள்ளார்.

கணவரை தேடி தேடி வெறுத்து போய்விட்டதன் காரணத்தாலேயே அவரின் குடும்பம் எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது போன்ற வித்தியாசமான வழக்கை முதல் முறையாக சந்திக்கும் நீதிமன்றம் இது சம்மந்தமாக முசா குடும்பத்தாருக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில் வழக்கை 30-ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers