அமெரிக்க படைகள் மீது தினமும் தாக்குதல் நடத்தும் ரஷ்யா: பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் மற்றும் அதற்கு சொந்தமான போர் ஆயுதங்களை அழிக்கும் நோக்கில் ரஷ்யாவும், சிரியாவும் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

சிரியாவில் அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யா தனது கண்டனங்களை தெரிவித்தது.

இந்நிலையில் ரஷ்யா மற்றும் சிரியா மீது அமெரிக்காவின் சிறப்பு ராணுவ குழு தலைவர் ரைமண்ட் தாமஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் கூறுகையில், ரஷ்யா தனது மின்னணு ஆயுதங்கள் மூலம் சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை தினமும் தாக்குகிறது.

முக்கியமாக சக்திவாய்ந்த எங்களின் EC-130 போர் விமானத்தை முற்றிலும் முடக்க ரஷ்யாவும், சிரியாவும் சேர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அதே போல அமெரிக்காவுக்கு சொந்தமான கண்காணிப்பு வானூர்திகளையும் குறிவைத்து தாக்குகிறார்கள்.

சிரியாவில் உள்ள எங்களின் முக்கிய ஆயுதங்களை அழிக்கவே இவ்வாறு ரஷ்யா செய்கிறது.

இதோடு ரஷ்யா தாங்கள் எதிர்காலத்தில் பயன்படுத்தும் ஆயுதங்களை சோதனை செய்யவும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers