4 வயது மகனை கடித்து கொலை செய்த தந்தை: நாடகமாடியது அம்பலம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் நான்கு வயது மகனை தந்தை கடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 28 வயது தந்தை ஒருவர் தன்னுடைய நான்கு வயது மகனுடன் Makassar பகுதியில் இருக்கும் Losari கடற்கரைக்கு சென்றுள்ளார்.

தந்தையுடன் கடற்கரைக்குச் சென்ற சிறுவன் அதன் பின் மிகவும் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலே அவர் இறந்துவிட்டான்.

இதுகுறித்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் சிறுவனின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர் இருசக்கர வாகனம் வந்து மோதியதன் காரணமாக மகனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இருப்பினும் பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் வர சிறுவனின் பிரேத பரிசோதனையை பார்த்துள்ளனர். அதில் சிறுவனுக்கு உடலில் கடித்தது போன்றே காயங்கள் இருந்துள்ளதே தவிர விபத்தினால் ஏற்பட்ட காயம் போன்று இல்லை என தெரியவந்துள்ளது.

இதனால் பொலிசார் அவரிடம் தங்களுடை கிடுக்குப் பிடி விசாரணையை மேற்கொண்ட போது அவர் தன் மகனை கடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆனால் அவர் சிறுவனை எத்தனை முறை கடித்தார் என்று தெரியவில்லை, அவர் மீது தற்போது கொலை குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதால், சுமார் அவர் 15 ஆண்டுகள் சிறை தண்டனை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...