பாலியல் வன்கொடுமை: கணவரை கொன்ற இளம்பெண்ணுக்கு மரணதண்டனை

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

சூடானில் பாலியல் வன்கொடுமை செய்த கணவரை கொலை செய்த இளம்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சூடானை சேர்ந்த நவுரா ஹீசைன் என்ற பெண்ணுக்கு 16 வயதில் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

படிப்பில் ஆர்வம் கொண்ட நவுராவின் ஆசையை மண்ணோடு புதைத்துவிட்டு திருமணம் செய்து வைத்தனர் அவரது பெற்றோர்.

திருமணத்துக்கு பின்னர் உறவினர் வீட்டில் தங்கியிருந்த நவுராவை அவரது தந்தை கணவர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.

அங்கு அவரது கணவர், உறவினர்கள் உதவியுடன் நவுராவை மிககொடுமையாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அடுத்த நாளும் இதேபோன்று முயல, கோபத்தில் நவுரா கணவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

ஷரியா சட்டத்தின்படி, கணவரை கொலை செய்த நவுராவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அவர்களது குடும்பத்தினர் பண இழப்பீட்டை ஏற்க மறுத்ததால் நவுராக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனை எதிர்த்து உலகளவில் #JusticeForNoura #SaveNoura போன்ற ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து சூடானுக்கான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் Ahmed Elzobier கூறுகையில், திருமணத்துக்கு பின்னரான கட்டாயப்படுத்தப்பட்ட உறவு சூடானில் சகஜம் என்றும், நவ்ரா வழக்கின் மூலம் வெளிஉலகுக்கு தெரியவந்துள்ளது.

இனிமேலாவது தனக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பெண்கள் குறைந்தது குடும்ப உறுப்பினர்களிடமாவது பகிர்ந்து கொள்வார்கள் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்