உலகையே உலுக்கிய பிஞ்சுக் குழந்தையின் மரணம்: இஸ்ரேலின் கண்ணீர் புகை குண்டுக்கு பலியான சோகம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
307Shares
307Shares
ibctamil.com

இஸ்ரேலின் கண்ணீர் புகை குண்டுக்கு பரிதாபமாக பலியான எட்டு மாதக் குழந்தையின் மரணம் உலகையே உலுக்கியுள்ளது.

Leila என்னும் அந்த எட்டு மாதக் குழந்தையின் தாயான Mariam al-Ghandour (17) தனது குழந்தையை தனது சகோதரர்களிடம் கொடுத்து விட்டு பல் மருத்துவரைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

ஆனால் Mariamஇன் தம்பியாகிய Ammar, அவர் குழந்தையின் பாட்டியுடன் இருப்பார் என்று தவறாக எண்ணி குழந்தையை எடுத்துக் கொண்டு எல்லைக்கருகில் சென்றுள்ளான், அங்கேதான் வன்முறை வெடித்துக்கொண்டிருந்தது.

கடைசியில் குழந்தையின் பாட்டியைத் தேடிக் கண்டுபிடித்து குழந்தையை அவரிடம் கொடுக்கவும் இஸ்ரேல் வீரர்கள் வீசிய கண்ணீர் புகை குண்டு வெடிக்கவும் சரியாக இருந்தது.

பாட்டி குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்திருக்கிறார்.

நீண்ட நேர அழுகைக்குப்பின் குழந்தை அமைதியாகியிருக்கிறாள். குழந்தை தூங்கி விட்டாள் என்று அனைவரும் நினைக்க சிறிது நேரத்தில் குழந்தையின் உடல் முழுவதும் நீலமாகியிருக்கிறது.

குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓட அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் இறந்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு அவளது தாய் அழும் புகைப்படங்கள் காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றன.

பல்வேறு நாடுகள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் பேசிய அமெரிக்க தூதரான Nikki Haley, இஸ்ரேலைப்போல் வேறெந்த நாடும் இதுபோல் மோசமாக நடந்து கொண்டிருக்காது என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலோ வன்முறைக்கு காரணம் Hamas அமைப்புதான் என்று கூறியுள்ளதோடு எதிர்ப்பாளர்கள் எல்லை தாண்டி வருவதிலிருந்து தனது மக்களைக் காக்க வேண்டியது தனது கடமை என்று கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்