சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட பொருள் இதுதான்: பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
81Shares
81Shares
ibctamil.com

வடக்கு சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ரசாயன தாக்குதலில் குளோரின் பயன்படுத்தப்பட்டதற்கான வாய்ப்பு உள்ளது என உலக ரசாயன ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 4-ஆம் திகதி இட்லிப் மாகாணத்தைச் சேர்ந்த சாராகேபில்லில் இத்தாக்குதல் நடந்தது.

அரசு தளத்தில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டரில் இருந்து பீரங்கி குண்டுகள் வீசி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர்.

சுவாச பிரச்சனை மற்றும் கண் எரிச்சல் போன்றவை அவர்களுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்ட சிலிண்டரிலிருந்து குளோரின் வெளியேறியிருக்க வாய்ப்புள்ளதாக உலக ரசாயன ஆயுதங்களின் தடைக்கான அமைப்பான OPCW தெரிவித்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலிண்டர்களிலும் குளோரின் இருப்பு உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இதோடு நேரில் கண்டவர்கள் சாட்சியம் மற்றும் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் குளோரின் வெளிப்பாடு இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பதன் மூலமாகவும் இது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்