வடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு: தென்கொரிய பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பிற்கான செய்தி சேகரிக்க, வெளிநாட்டு ஊடகங்களுடன் தென்கொரிய பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வடகொரிய மற்றும் தென்கொரிய ஜனாதிபதிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றவும், கொரியப் போரை முறைப்படி முடிவுக்கு கொண்டு வருவதற்காக பணியாற்றவும் உறுதி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வடகொரியாவின் புங்யே-ரி அணு ஆயுத பரிசோதனை தளம், பருவநிலைக்கு ஏற்ப இன்றில் இருந்து வெள்ளிக்கிழமைக்குள் அழிக்கப்படும் என கூறப்பட்டது.

இதுதொடர்பாக செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தென்கொரிய பத்திரிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், அமெரிக்க மற்றும் தென்கொரிய ராணுவ கூட்டு பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சியோல் உடனான உயர்மட்ட அளவிலான தொடர்பை வடகொரியா துண்டித்தது.

இந்நிலையில், தென்கொரியாவின் 8 பத்திரிக்கையாளர்கள் கொண்ட பட்டியலுக்கு வடகொரியா அனுமதி வழங்கியுள்ளதாக, சியோல் ஒருங்கிணைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, தென்கொரிய பத்திரிக்கையாளர்கள் சிறப்பு விமானம் மூலமாக வடகொரியாவிற்கு அழைத்துவரப்பட உள்ளனர். ஏனைய நாடுகளின் பத்திரிக்கையாளர்கள் நேற்றே வந்து சேர்ந்துவிட்டனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers