இரண்டாக உடைந்த விமானம்: ஹோண்டூராஸ் விபத்து

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

டெக்சாஸிலிருந்து ஹோண்டூராஸ் சென்ற தனியார் விமானம் ஒன்று தரையிறங்கும்போது இரண்டாக உடைந்தது.

விமானத்திலிருந்த ஆறு அமெரிக்க பயணிகள் காயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த விமானம் நேற்று ஹோண்டூராஸின் தலைநகரான Tegucigalpaவில் தரையிறங்கும்போது இந்த விபத்து நேரிட்டது.

Toncontin சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகியதால் இந்த விபத்து நேரிட்டது.

எத்தனைபேர் விமானத்தில் இருந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகள் சரியாக அறிவிக்காத நிலையில் பொலிசார் ஒருவர் யாரும் உயிரிழக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதிக காயம் எதுவும் ஏற்படாத நிலையிலிருந்த ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் விமானத்திலிருந்து மீட்கப்பட்டதாக சம்பவம் நடந்ததை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

REUTERS

மலைகள் சூழ்ந்த மிக சிறிய ஓடுபாதையைக் கொண்ட Toncontin சர்வதேச விமான நிலையம் உலகின் மிகவும் மோசமான விமான நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அரசாங்கம் தலைநகரிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் ஒரு புதிய சர்வதேச விமானநிலையம் ஒன்றை அமைத்து வருகிறது.

EPA

REUTERS

AFP/GETTY

REUTERS

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...