75 வயது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகள்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

அசாம் மாநிலத்தில் இளம் வயது மகள் ஒருவர் தனது வயதான தந்தையை கொலை செய்து புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்வாநாத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் முதுகலைப்பட்டம் படித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக அந்த குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அந்த சடலம், இளம்பெண்ணின் தந்தை என தெரியவந்தது.

இதுகுறித்து விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின, கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி, இளம்பெண் வீட்டின் அறையில் தூங்கிகொண்டிருந்துள்ளார். அப்போது, தந்தை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்,

இதனைத் தடுத்த இளம்பெண்ணை அவர் கோடரியால் தாக்க முயன்றபோது, அதைப் பிடுங்கி தனது தந்தையை வெட்டிக்கொன்றுள்ளார்.

இதையடுத்து, வீட்டில் ஒருஅறையில் இறந்த தந்தையின் சடலத்தை மறைத்து வைத்திருந்த அவர்கள், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 15 அடி ஆழத்திற்கு குழிதோண்டி மார்ச் 7ஆம் தேதியன்று சடலத்தைப் புதைத்துள்ளனர்.

இவ்வாறு, இளம்பெண் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers