அழுக்கான உடை, பார்க்க வறியவர் போன்ற தோற்றம்: துரத்தி விட்ட விற்பனையாளர்களுக்கு பதிலடி தந்த முதியவர்.

Report Print Trinity in ஏனைய நாடுகள்

ஆள் பாதி ஆடை பாதி என்றொரு பழமொழியை வெகுகாலமாகவே இந்த உலகம் நம்பி வந்திருக்கிறது. எவ்வளவோ நாகரிகமாக உடை அணிந்த மனிதர்களுக்குள் அநாகரிகமான விஷயங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கு சாட்சியாக இந்த நிகழ்வை சொல்லலாம்.

தாய்லாந்து நாட்டில் ஒரு வயதான முதியவர் அழுக்கான தன் அளவிற்கு பொருந்தாத கிழிசல் ஆடைகளுடன் ஹார்ட்லி டேவின்சன் பைக் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சென்றிருக்கிறார்.

ஹார்ட்லி டேவின்சன் என்பது மதிப்பில் பல லட்சத்தை தாண்டும் மிக விலை அதிகமான பைக் வகைகள்.

இந்த இடத்திற்கு விஜயம் செய்த முதியவரை அவரது உடையை பார்த்து ஒதுங்கி இருக்கின்றனர் விற்பனையாளர்கள். அவரை மதிக்கவே இல்லை. அவரும் யாரேனும் நம்மை விசாரிப்பார்கள் என்று காத்திருக்க, யாரும் வரவில்லை. இப்படியே ஒவ்வொரு ஹார்ட்லி டேவிட்சன் பைக் விற்பனை நிலையமாக இவர் சென்றிருக்கிறார்.

இவரது கிழிந்த ஆடைகளையும் சாதாரண செருப்பையும் பார்த்த விற்பனையாளர்கள் யாருமே இவரை கண்டுகொள்ளாத நிலையில் ஒரு கடையில் அதன் முதலாளியை அழைத்திருக்கிறார். விற்பனையாளர்கள் கண்டு கொள்ளாத நிலையில் நல்ல வேலையாக முதலாளி அவரை அணுகி நட்பான முறையில் அவரது தேவையை கேட்டிருக்கிறார்.

இறுதியாக தனக்கு பிடித்த ஹார்ட்லி டேவிட்ஸன் பைக்கை தேர்ந்தெடுத்த முதியவர் தனது கிழிந்த ஓட்டைகள் விழுந்த பெரிய காலுடைகளில் இருந்து அதற்கான பணமான 12லட்ச ரூபாய்களை எடுத்து கொடுத்து இந்த பைக்கை ஓடி சென்றிருக்கிறார்.

ஆச்சர்யத்தில் வியந்து போயிருக்கின்றனர் அங்கிருந்தவர்கள். இதற்கு முன் இவர் சென்று இதுவரை கண்டுகொள்ளாமல் விட்ட பைக் விற்பனையாளர்களுக்கு தற்போது இதனை கேட்டு நெஞ்சு வலி வந்திருக்க கூடும்!

இந்த நிகழ்வுகளை புகைப்படம் எடுத்த முதியவரின் சகோதரி தனது முகநூல் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். பகிர்ந்த சில மணிநேரங்களிலேயே பரவலாக வாசிக்கப்பட்ட இந்த செய்தி அனைவராலும் பகிரப்பட்டு இணையதளம் முழுக்க வளம் வருகிறது.

அனைவரையும் அதிசயிக்க வைத்த இந்த முதியவர் பெயர் லுங் டெச்சா .அடிப்படையில் மெக்கானிக்கான இவர் நேர்மையான மற்றும் கடுமையான உழைப்பாளி.புகை குடி சூதாட்டம் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இவர் இவ்வளவு காலமாக சேமித்து வைத்திருந்த பணத்தில் தனக்கு பிடித்த பைக்கை வாங்கியிருக்கிறார்.

எந்த ஒரு புத்தகத்தையும் அதன் அட்டையை கொண்டு முடிவு செய்ய கூடாது என்னும் பழமொழிக்கேற்ப இந்த முதியவரின் உடைகளைக் கொண்டு அவரை மதிக்காத மற்ற விற்பனையாளர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட இந்நிகழ்ச்சி ஒரு பாடம்தான்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்