விவாகரத்து கேட்ட மனைவி: கணவன் செய்த கொடுஞ்செயல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் விவாகரத்து கேட்ட மனைவியை கணவன் காரை விட்டே மோதித்தள்ளி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Khabarovsk நகரில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் தங்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாகுவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி காரில் இருந்து வெளியேறும்படியும், தமக்கு விவாகரத்து வேண்டும் எனவும் கணவரிடம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து காரை நிறுத்திய கணவன், அவரை காரில் நின்று வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார்.

பின்னர் சாலையின் நடுவே காரை வைத்து மோதி கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குறித்த பெண் உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவசர உதவிக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் பொலிசாருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

சிறு காயங்களுடன் உயிர் தப்பிய குறித்த பெண் மருத்துவமனை செல்ல மருத்துள்ளதாக கூறப்படுகிறது.

பொலிசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்