தரையில் சிந்திய காபியை சுத்தம் செய்த பிரதமர்: வேகமாக பரவும் வீடியோ!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நெதர்லாந்தில் தான் தரையில் சிந்திய காபியை, அந்நாட்டு பிரதமர் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ரூடே, கையில் காபியுடன் பாராளுமன்றத்தில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் காபியை தரையில் கொட்டிவிட்டார்.

அதனால் அதிர்ச்சியான அவர், உடனே அருகில் இருந்த பணியாளரிடம் துடைப்பானை வாங்கி தானே கீழே சிந்திய காபியை சுத்தம் செய்தார். நடுவில் துடைப்பானை அவர் கையாள சிரமப்பட்டபோது, பணியாளர்கள் அதனை சரிசெய்து கொடுத்தனர்.

இச்சம்பவத்தை அந்நாட்டு தூதர் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிரதமரின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்ததால், அந்நாட்டு மக்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers