இரண்டு நாடுகளுக்கும் திருப்திதான்: கிம்முடனான சந்திப்பு குறித்து டிரம்ப்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
121Shares
121Shares
ibctamil.com

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த வட கொரிய அதிபர் கிம் அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு நிகழ்ந்துள்ள நிலையில் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்க, பேச்சு வார்த்தைகளின் விளைவுகள் இரண்டு நாடுகளுக்கும் திருப்தியை அளிக்கும் என நம்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்ட இரு நாட்டு தலைவர்களிடமும் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியபோது, தாங்கள் மிக விரைவில் ஒரு நிகழ்வை தொடங்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அணு ஆயுதங்கள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினீர்களா என கேட்டபோது, இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் அனைத்தையும் பார்ப்பீர்கள், நாங்கள் கையெழுத்திட்ட இந்த ஆவணம் பல முக்கிய விடயங்கள் அடங்கிய ஒன்று, இரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளின் விளைவு குறித்து மிகவும் திருப்தி அடையும் என நான் நம்புகிறேன், அதிக நல்லெண்ணமும் அதிக வேலையும் இதற்கு காரணமாக அமைந்துள்ளன.

இரண்டு பக்கங்களில் உள்ளவர்களுக்கும், செயலர் பாம்பியோ உட்பட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் மிக அருமையான வேலையைச் செய்திருக்கிறார்கள் என தெரிவித்த டிரம்ப் வட கொரிய அதிபர் கிம்மிடம், மிக்க நன்றி, மிக அருமை என்று தெரிவித்ததோடு கிம்மிடம் கை குலுக்கி அவரைத் தட்டியும் கொடுத்தார்.

அவரிடம் பத்திரிகையாளர்கள் வட கொரிய அதிபரை வெள்ளை மாளிகைக்கு அழைப்பீர்களா என கேட்டதற்கு, “நிச்சயமாக அழைப்பேன்” என்று கூறினார்.

அதேபோல் சந்திப்பால் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ள வட கொரிய அதிபர் கிம்மும், ”கடந்த காலத்தை விட்டு விடப்போகிறோம், உலகம் இனி பெரிய மாற்றத்தைப் பார்க்கும்” என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பை நிகழச் செய்ததற்காக அதிபர் டிரம்ப் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய அவருக்கு அதிபர் டிரம்ப் “மிக்க நன்றி” என்று பதிலுக்கு கூற மீண்டும் இரு தலைவர்களும் பரஸ்பரம் கை குலுக்கிக் கொண்டனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்