7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை: ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்த குற்றவாளி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
174Shares
174Shares
lankasrimarket.com

பாகிஸ்தான் நாட்டை உலுக்கிய 7 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு இரையாக்கி கொலையும் செய்த வழக்கில் Mohammad Imran என்ற இளைஞன் சிக்கினான்.

இந்த வழக்கின் விசாரணை பல அமர்வுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள Mohammad Imran 7 வயது சிறுமி உள்ளிட்ட 8 சிறுமிகளை இதுவரை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது.

மட்டுமின்றி சர்வதேச அளவில் சிறுவர்கள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு கும்பல்களுடன் Mohammad Imran-கு தொடர்பு இருப்பதும், குறித்த இளைஞரிடம் இருந்து சிறுவர்கள் தொடர்பான பல ஆபாச வீடியோக்களும் பொலிசார் கைப்பற்றினர்.

இந்த நிலையில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும், தம்மீதான குற்றச்சாட்டுக்கு உரிய விசாரணை நடைபெறவில்லை எனவும் Mohammad Imran நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியிருந்தார்.

மட்டுமின்றி தமக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் Mohammad Imran-கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை லஹூர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இருப்பினும் பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கருணை மனு மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும் Mohammad Imran தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7 வயது சிறுமி Zainab Ansari மாயமானதாக உறவினர்கள் பொலிசாரின் உதவியை நாடினர்.

ஆனால் பொலிசாரின் நடவடிக்கையில் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள Kasur நகரில் உள்ள குப்பைக்கிடங்கில் சிறுமியின் சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் பல பகுதிகளில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குறித்த கொலை சம்பவத்தில் Mohammad Imran-கு தொடர்பு இருப்பது தெரியவந்ததுடன், விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்