டிரம்பை சந்திக்க 7 நிமிடங்களுக்கு முன்னரே வந்த கிம் ஜாங் உன்: ஏன் தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
842Shares
842Shares
lankasrimarket.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை சந்திக்க, வடகொரிய ஜனாதிபதி கிம் 7 நிமிடங்கள் காத்திருந்ததன் பின்னணி தெரிய வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இருவரும், இன்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இந்நிலையில், டிரம்ப்-கிம் சந்திப்பில் ஏழு நிமிடங்களுக்கு முன்னதாக, கிம் ஜாங் உன் வந்ததற்கான சுவாரஸ்ய காரணம் தெரிய வந்துள்ளது.

இந்த சந்திப்பு சிங்கப்பூரின் செந்தோசா தீவில் இந்திய நேரப்படி, இன்று காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. வடகொரிய பாரம்பரியத்தின் படி, வயதில் சிறியவர்கள் தான் எந்த நிகழ்வாக இருந்தாலும் முன்கூட்டியே வரவேண்டுமாம்.

அதனாலேயே கிம் ஜாங் உன், 7 நிமிடங்களுக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தாராம். டொனால்டு டிரம்ப்பின் வயது 71, கிம் ஜாங் உன்னின் வயது 34 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்