எதிரிக்கு எதுவும் தெரியக்கூடாது! வட கொரிய அதிபர் சிங்கப்பூருக்கு கழிவறையை கொண்டு சென்றது இதற்குதான்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
1274Shares
1274Shares
ibctamil.com

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடனான சந்திப்பிற்காக சிங்கப்பூர் சென்ற வட கொரியா அதிபர் தான் பயன்படுத்த தேவையான கழிவறையையும் கொண்டு சென்றுள்ளார்.

நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பர கழிவறைகள் இருந்தபோதும் அவர் பயன்பாட்டிற்காக கழிவறையும் உடன் எடுத்து வரப்பட்டுள்ளது.

இதற்கு சொல்லப்படும் முக்கியகாரணம், எதிரிகளுக்கு எந்த விதத்திலும் கிம்மை பற்றிய விவரங்கள் கசிந்துவிடக்கூடாது என்பது தான்.

ஏனெனில் கழிவறையில் இருந்து வெளியேறும், சிறுநீர், மலம் ஆகியவற்றை எதிரிகள் கைப்பற்றி, அதன் மூலம் உடலில் உள்ள குறைபாடுகள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, உடல் பருமனுக்கான காரணம், புகைப்பழக்கம்,உணவுப்பழக்கம், மதுப்பழக்கம், சமீபத்தில் உடலில் ஏற்பட்டிருந்த பிரச்சனை, புற்றுநோய், குடல்நோய் உள்ளிட்ட அனைத்து விதமான தகவல்களையும் மருத்துவர்களால் கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் அவை எதிரிகளுக்கு துருப்பாக அமைந்துவிடும் என்பதால் கழிவறையை கூட அதிபர் கிம் உடன் கொண்டு சென்றுள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் எப்போதும் சுய பாதுகாப்பில் தீவிரமாக ஈடுபாடு காட்டுபவர். தனது சொந்த நாட்டுக்குள் பயணிக்கும்போதும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் கழிவறையை எடுத்து செல்வார் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்