சிங்கப்பூரில் டிரம்ப் கார் முன் நின்று செல்பி எடுக்க இளைஞர் செலவழித்த தொகை தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
975Shares
975Shares
lankasrimarket.com

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் டிரம்ப் கார் முன் நின்று செல்பி எடுப்பதற்கு சுமார் 38,000 ரூபாய் செலவழித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரில் சந்தித்து பேசிக் கொண்டனர்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் மகாராஜ் மோகன்(25), என்பவர் டிரம்ப் காரின் முன்பு நின்று செல்பி எடுப்பதற்கு 38,000 ரூபாய் வரை செல்வழித்துள்ளார்.

டிரம்பின் தீவிர அனுதாபியான இவர், டிரம்புடன் எப்படியாவது ஒரு செல்பி எடுத்துவிட வேண்டும் என்பதற்காக சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் உள்ள ஹோட்டலில் ஒருநாள் இரவு தங்கியுள்ளார்.

அதன் பின் இன்று நடைபெற்ற சந்திப்பிற்கு டிரம்ப் செல்லும் போது, அவருடன் செல்பி எடுக்க ஹோட்டல் வரவேற்பு அறையில் சுமார் 5 மணி நேரமாக அவர் சுற்றி திரிந்த அவரால் டிரம்ப் பயன்படுத்தும் பீஸ்ட் என்ற கார் அருகே மட்டுமே நின்று அவரால் செல்பி எடுக்க முடிந்துள்ளது.

இந்த செல்பிக்காக அவர் தங்கிய ஹோட்டலின் ஒரு நாள் இரவு வாடகையாக 38,000 ரூபாய் செலவழித்துள்ளார்.

இது குறித்து மகாராஜ் மோகன் கூறுகையில், அனைவரும் டிரம்ப் உடன் செல்பி எடுப்பது சாத்தியம் இல்லாத காரியம் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால், சில நேரம் எதிர்பாராதவைகளும் நடக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்த முயற்சியில் இறங்கினேன் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்