வடகொரியர்களுக்கு பிடித்த நிறத்தில் டை அணிந்து வந்த டிரம்ப்: வெளியான சுவாரஸ்ய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
466Shares
466Shares
lankasrimarket.com

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய ஜானதிபதி கிம் ஜாங் உன் ஆகியோரின் சந்திப்பை உலகநாடுகளே கவனித்து வந்தது.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சமூகவலைத்தளங்களில் இன்றைய நாள் டிரம்ப்பின் நாள் என்று கூட கூறலாம்.

இந்த இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பை தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் நேரடி வீடியோ ஒளிபரப்பு மூலம் கண்டார். அப்போது அவர் இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்த வரலாற்று சந்திப்பு இவ்வளவு அமைதியாக நடைபெற்றதை உலகமே பாராட்டி வரும் நிலையில், இந்த சந்திப்பின் போது டிரம்ப் சிவப்பு நிறத்தில் ஏன் டை அணிந்து வந்தார் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

டிரம்ப் சிவப்பு நிற டை அணிந்து வந்ததற்கு முக்கிய காரணம் வடகொரியர்கள் தானாம், ஏனெனில் அவர்களுக்கு சிவப்பு நிறம் என்றால் அவ்வளவு பிடிக்குமாம் அதன் காரணமாகவே டிரம்ப் சிவப்பு நிறத்தில் டைஅணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்