சிங்கப்பூர் சந்திப்புக்கு பின் அடுத்த அதிரடி முடிவு எடுத்த கிம்: முதல் முறையாக செல்கிறார்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
978Shares
978Shares
lankasrimarket.com

அமெரிக்காவிற்கு வருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்ததால், கிம் ஜான் உன் அதை ஏற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் நேற்று வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-வடகொரியா ஜனாதிபதி கிம் சந்தித்து பேசிக் கொண்டனர்.

இந்த சந்திப்புக்கு பின்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இரு நாடுகளுக்கிடையேயான போர் விளையாட்டு முடிவுக்கு வந்துள்ளது.

இனி நடப்பவை எல்லாம் நல்ல படியாகவே நடக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது டிரம்ப், வடகொரிய ஜனாதிபதியை வெள்ளை மாளிகைக்கு வரும் படி அழைத்ததாக கூறப்படுகிறது.

தற்போது அதை கிம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் அமெரிக்காவிற்கு சென்றதில்லை என்பதால், இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்