பட்டப்பகலில் இளம்பெண்ணை 23 முறை கத்தியால் குத்திய இளைஞன்: விடுவித்த நீதிமன்றம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
207Shares
207Shares
lankasrimarket.com

பாகிஸ்தானில் பட்டப்பகலில் இளம்பெண்ணை 23 முறை கத்தியால் குத்திய வழக்கில் குற்றவாளியை விடுவித்த தீர்ப்புக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.

பாகிஸ்தானில் காதலுக்கு மறுப்பு தெருவித்த கல்லூரி மாணவியை சக மாணவன் ஒருவன் பட்டப்பகலில், பரபரப்பான சாலையின் நடுவே 23 முறை கத்தியால் குத்தியுள்ளான்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இச்சம்பவத்தில் Khadija Siddiqui என்ற இளம்பெண், அவரது கார் ஓட்டுனரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

குறித்த சம்பவத்தில் அவரது கழுத்து, கைகள், புறமுதுகு என பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

விசாரணையின்போது தம்மீது தாக்குதல் நடத்திய நபர் சக மாணவர் என்றும் அவரது பெயர் ஷா ஹுசைன் எனவும் விசாரணை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்திருந்தார்.

காதலுக்கு மறுப்பு தெருவித்ததாலையே தம் மீது அவர் தாக்குதல் நடத்தியதாகவும் விசாரணையின் போது அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம், குறித்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால் குறித்த தீர்ப்புக்கு வழக்கறிஞரான ஹுசைனின் தந்தை மேல்முறையீடு செய்திருந்த நிலையில், ஜூன் 4-ஆம் திகதி வெளியான தீர்ப்பில் ஷா ஹுசைன் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டது பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தொடர்ந்து 3 வாரம் மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னரும் இன்னமும் சரிவர குணமடையாத காதிஜா குறித்த தீர்ப்பை கேட்டு தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி குறித்த இளைஞருக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை தமது போராட்டம் ஓயாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்