மூக்கு, வாயில் ரத்தம் வந்து மெல்ல மெல்ல இறந்தாள்: மனதை உருக்கும் புகைப்படங்களை பதிவிட்ட தாய்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சைபிரியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகள் மெல்ல மெல்ல இறந்தது தொடர்பான மனதை உருகவைக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

சைபியாவைச் சேர்ந்தவர் Dragana. இவரது 2 வயது மகள் Nadja Petrovic கடந்த மார்ச் மாதம் தட்டம்மை போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் Dragana தன்னுடைய மகள் Nadja Petrovic மிகவும் வேதனையாக மெல்ல, மெல்ல இறந்தது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், Nadja Petrovic-வுக்கு கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் திகதி உடல் நலப் பிரச்சசனை ஏற்பட்டது.

மூன்று நாட்கள் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

சிகிச்சை பெற்று வந்த அவள் கடந்த மார்ச் மாதம் 4-ஆம் திகதி இறந்தாள். இந்த காலக்கட்டத்தில் அவள் சாப்பிடவில்லை, எதுவும் குடிக்கவில்லை, எந்த ஒரு அசைவும் அவளிடம் பார்க்க முடியவில்லை.

பல நோய்களால் பாதிக்கப்பட்ட அவளுக்கு தட்டம்மை நோயினால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வந்தது. அவளை காப்பாற்ற தொடர்ந்து போராடிய நிலையில் கடந்த மார்ச் மாதம் 4-ஆம் திகதி இதயத்துடிப்பு நின்று இறந்தாள்.

முக்கியமாக Dragana தன்னுடைய குறிப்பில், ஒவ்வொரு குழந்தையையும் நாம் தொற்று நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் சிறுமி hypoparathyroidism, autoimmune hepatitis மற்றும் hypocalcaemia போன்ற நோய்களால் கடும் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்