பர்தாவை ஒழுங்காக போடும் படி மிரட்டப்பட்ட பெண்! பதிலுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈரானில் பொது இடத்தில் பர்தாவை ஒழுங்காக அணியும் படி பொலிசாரால் மிரட்டப்பட்ட பெண், அதை எதிர்த்து தைரியமாக அவர் செய்த செயல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஈரான் நாட்டில் பெண்கள் கட்டாயம் பர்தா அல்லது முக்காடு அணிய வேண்டும். இதை பெண்கள் பின்பற்ற தவறினால் அவர்களுக்கு அபராதம் போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும்.

இந்நிலையில் சமீபத்தில் ஈரானில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், இளம்பெண் ஒருவர் பொது இடத்தில் தனது தோழியுடன் அமர்ந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பெண் பொலிசார் ஒருவர் பர்தாவை ஒழுங்காக அணியும் படி கூறியுள்ளார்.

இது குறித்து அந்த பெண் பொலிசாரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பெண் பொலிஸ் மிரட்டிய தோனியில் பேசியதால், ஆத்திரமடைந்த அப்பெண் நீங்கள் யார் என்று கேள்வி கேட்டு விட்டு,

தலையில் அணிந்திருக்கும் பர்தாவை தைரியமாக எடுத்துவிடுகிறார். இந்த வீடியோவிற்கு ஒரு பக்கம் பாராட்டுக்களும், ஒரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்