துப்பாக்கிச் சூடில் முடிந்த கொண்டாட்டம்: உயிருக்கு போராடும் இளைஞர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்வீடனில் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தின் இடையே மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த 4 இளைஞர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்வீடன் நகரமான Malmo-வில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 18 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டுமின்றி குறித்த விவகாரத்தால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும், இது பயங்கரவாத தாக்குதல் அல்ல எனவும் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் தென் கொரியாவுக்கு எதிராக ஸ்வீடன் கால்பந்து அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் திரளான இளைஞர்கள் கூடியுள்ளனர்.

அப்போது நபர் ஒருவர் தமது துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத்திவங்கியுள்ளார். மொத்தம் 20 முறை அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பார்வையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தின் அருகாமையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் உடனடியாக நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

காயமடைந்த இளைஞர்களை மீட்டு உடனடியாக அடுத்துள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் குழுச்சண்டைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

காயமடைந்தவர்களை அனுமதித்துள்ள மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers