சீனாவிற்கு சென்றிருக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், பல உலக பிரச்சனைகள் குறித்து சீன ஜனாதிபதியுடன் கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சீனாவிற்கு சென்றுள்ளார். அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-யை அவர் சந்தித்து பேச உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் பல முக்கிய பிரச்சனைகள் குறித்தும், அணு ஆயுதம் மற்றும் வடகொரியா பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அமைதிக்கான பேச்சுவார்த்தையாக கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பை சந்தித்த கிம் ஜாங் உன், வர்த்தகப் போரில் அமெரிக்கா-சீனா ஈடுபட்டிருக்கும் நிலையில் சீன ஜனாதிபதியை சந்திக்க உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டிரம்ப் உடனான சந்திப்பிற்கு பிறகு கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.