படுக்கையறையில் திடீரென்று வெடித்துச் சிதறிய ஸ்மார்ட் போன்: மலேசிய நிறுவன CEO-வுக்கு நேர்ந்த கதி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஸ்மார்ட் போன் வெடித்துச் சிதறியதில் மலேசிய நிறுவன சிஇஒ பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cradle Fund எனும் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான Nazrin Hassan பிளாக்பெர்ரி மற்றும் ஹவேய் போன்ற இரண்டு வகை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திவந்துள்ளார்.

சம்பவ தினத்தின் போது இவர் தன்னுடைய படுக்கையறையில் இரண்டு போன்களையும் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று ஒரு போன் திடீரென்று வெடித்து சிதறி தீ பிடித்ததால், படுக்கையறை முழுவதும் தீ பரவியுள்ளது.

இருப்பினும் நசீர் ஹசன் தீ விபத்தால் உயிரிழக்கவில்லை எனவும் வெடித்துச் சிதறிய போனின் பாகங்கள் அவரது பின் தலையில் பட்டு அதிர்ச்சியால் உயிரிழந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers