மூன்று முறை திருமணம்! லட்சக்கணக்கில் மோசடி: இளைஞனிடம் ஏமாந்து நிற்கும் சிங்கப்பூர் தமிழ் பெண்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சிங்கப்பூர் தமிழ் பெண்ணை காதலித்து, ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் புதுக்கோட்டை வசந்தம் நகரைச் சேர்ந்தவர் கணேஷ்(36). இவருக்கும் சென்னையைச் சேர்ந்த சீதாலட்சுமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கணேஷ் சிங்கப்பூரில் வேலை கிடைத்துள்ளதாக கூறி, சிங்கப்பூருக்கு பறந்துள்ளார்.

அங்கு இவருக்கு மலேசிய தமிழ் பெண்ணான சங்கீதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாற இருவரும் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சங்கீதாவுக்கு கணேஷ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியாது.

இந்நிலையில் கணேஷ் திடீரென்று வீடு வாங்க வேண்டும் என்று கூறி, சங்கீதாவிடம் 72 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு தமிழ்நாட்டிற்கு திரும்பியுள்ளார்.

தமிழ்நாட்டின் தன்னுடைய சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்த கணேஷ் மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.

சொந்த ஊருக்கு சென்ற கணவன் பல மாதங்களாக திரும்பாத காரணத்தால், சங்கீதா சந்தேகமடைந்துள்ளார். அதன் பின் அவரைப் பற்றி விசாரித்த போது, கணேஷ் ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரியவந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்த போது, இங்கு வந்தும் அவர் திருமணம் செய்திருப்பதை கேட்டு மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கணவன் மீது கொண்ட ஆத்திரத்தால், கணேஷ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு தன்னிடம் ரூ.72.82 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றி விட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் கணேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் கணேஷின் தாய், சகோதரர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்