இத்தாலி நாட்டு தேர்தலில் இலங்கை தமிழர்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இத்தாலியில் இன்று நடைபெறும் வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இலங்கை தமிழர்கள் இருவர்கள் களமிறங்கியுள்ளனர்.

இத்தாலி நாட்டில் உள்ள பலெர்மோ நகரில் வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் சுமார் 17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டினர் போட்டியிடுகின்றனர்.

இதில் குறிப்பிட்ட தொகுதியில் இலங்கை சார்பாக தியாகராஜா ரமணி மற்றும் அருள்நேசன் தயாராஜ் என்ற இரண்டு இளம் தமிழர்கள் களம் இறங்கியுள்ளனர்.

இலங்கையை முக்கியப்படுத்தி போட்டியிடும் இந்த இளம் தலைமுறையினரின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. நடைபெறும் இந்த தேர்தலுக்கான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்