கிம் - டிரம்ப் சந்திப்புக்கு செலவான தொகை: வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆகியோர் இடையே நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்காக சுமார் 16.3 மில்லியன் டொலர் செலவிட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகாரத்துறை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

ஞாயிறன்று இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட சிங்கப்பூர் வெளிவிவகாரத்துறை அமைச்சகம், குறித்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வுக்கு செலவான தொகையில் பெரும்பகுதி பாதுகாப்புக்கு மட்டுமே எனவும் தெரிவித்துள்ளது.

குறித்த உச்சிமாநாட்டிற்கான செலவு சுமார் 20 மில்லியன் டொலரை தொடும் என சிங்கப்பூர் பிரதமர் முன்னதாக கணித்திருந்தார் எனவும்,

ஆனால் 16 மில்லியன் டொலர் தொகையில் திட்டமிட்டப்படி குறித்த நிகழ்வை அதிகாரிகள் குழு நடத்தி முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செலவிடப்பட்டுள்ள தொகையானது சர்வதேச சமூகத்திற்காக நல்லெண்ண அடிப்படையில் சிங்கப்பூர் அளிக்கும் சிறு உதவியே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச தலைவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை விடவும், கிம் மற்றும் டிரம்புக்கு மிகவும் துல்லியமான ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது எனவும்,

காரணம் அந்த சந்திப்பின் நோக்கம் மற்றும் அதில் விவாதிக்கப்படும் கருத்தின் முக்கியத்துவம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம் மற்றும் அது சார்ந்த அமைச்சகம் சுமார் 4 மில்லியன் டொலர்கள் செலவிட்டுள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்