தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 13 பேரும் பைனல் பார்க்க வாருங்கள்: பிபா தலைவர்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்களும் உயிருடன் மீட்கப்பட்டால் ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து இறுதி போட்டியை கணவருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர், உயிருடன் இருப்பதாக பிரித்தானியவை சேர்ந்த 2 நீர்மூழ்கி வீரர்கள் கடந்த 9-ம் தேதி உறுதி செய்தனர்.

இதனையடுத்து அவர்கள் அனைவரையும் விரைந்து மீட்கும் பணியில் தாய்லாந்தின் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) அமைப்பின் தலைவர் கியான்னி இன்பான்டினோ, தாய்லாந்து கால்பந்து சங்க தலைவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், குகையில் சிக்கியுள்ள 13 பேரும் விரைவில் உயிருடன் மீட்கப்படுவார்கள் என தான் நம்புவதாகவும், அதற்காக தொடர்ந்து பிராத்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 13 பேரும் மீட்கப்பட்டு குடும்பத்துடன் இனைந்ததும், அவர்களது உடல் ஒத்துழைத்தால் ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து இறுதிப்போட்டியினை காண வரலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக குகையில் சிக்கியுள்ள 13 பேருக்கும் ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்களை கொண்டு சென்ற தாய்லாந்து முன்னாள் கடற்படை வீரர் சமன் குணன் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்