பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவம்: அதிர்ச்சி தகவல் வெளியானது

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
128Shares
128Shares
lankasrimarket.com

தெற்கு சூடானில் நடந்த உள்நாட்டு போரின் போது, பெண்கள் மற்றும் சிறுமிகளை ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐநா குற்றஞ்சாட்டியுள்ளது.

தெற்கு சூடான் நாட்டில் அரசு படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை, அரசு ராணுவப் படைகள் மற்றும் ஆதரவு படைகள் கைப்பற்றுவதற்காக விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக, மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் விளைவுகள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அரசு மற்றும் ஆதரவு படைகள் கிராமங்களின் மீது தாக்குதல் நடத்தியதில் 232 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலின்போது 120 பெண்கள் மற்றும் சிறுமிகளை ராணுவத்தினர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரை அந்நாட்டில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு, மூன்று ராணுவ உயர் அதிகாரிகளே பொறுப்பாளிகள் எனவும் ஐ.நா நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்