தனித்தீவு, சொகுசு பங்களா.... வடகொரிய ஜனாதிபதியிடம் உள்ள ஆடம்பரமான 5 விடயங்கள்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
145Shares
145Shares
lankasrimarket.com

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் உலகுக்கு மர்மமானவராக திகழ்ந்து வரும் நிலையில் சமீபகாலமாக உலக தலைவர்களுடன் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் கிம் ஜாங்கிடம் உள்ள 5 ஆடம்பரமான விடயங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

தனியாக கோல்ப் மைதானங்கள்

கிம் ஜாங்குக்கு இரண்டு கோல்ப் மைதானங்கள் உள்ளது, இதை வடகொரிய அரசு அதிகாரிகள் பராமரித்து வருகிறார்கள்.

மைதானத்தை உருவாக்க $3 மில்லியன் செலவு செய்யப்பட்ட நிலையில், இதை பராமரிக்க ஆண்டுக்கு $500,000 செலவிடப்படுகிறது.

தனித்தீவு

கிம் ஜாங்குக்கு சொந்தமாக சகல வசதிகளுடன் தனித்தீவே அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை அமெரிக்க பிரபலம் ஒருவர் குறித்த தீவுக்கு சென்று பார்வையிட்ட நிலையில் தீவானது ரகசிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சொகுசு ரிசார்ட்

$35 மில்லியன் மதிப்பிலான Masikryong Ski ரிசார்ட் வடகொரியா சுற்றுலா துறை மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டதாகும்.

இங்கு 120 அறைகள் மொத்தம் உள்ளது, ரிசார்டுக்கு வரும் மக்களை கண்காணிக்க வடகொரிய ராணுவ வீரர்கள் எப்போதும் அங்கு உலா வந்தபடி இருப்பார்கள்.

ஹொட்டல்

Ryugyong ஹொட்டல் Yu-Kyung ஹொட்டல் என்ற பெயரிலும் அழைக்கபடுகிறது. 3330 மீட்டர் உயரம் கொண்ட இந்த ஹொட்டல் கட்டிடம் பிரமிட் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

கும்சுசன் மாளிகை

கும்சுசன் மாளிகை முன்னர் கும்சுசன் நினைவிட மாளிகை என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

இது கம்யூனிஸ்ட் தலைவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப் பெரிய மாளிகையாகும். மாளிகையானது அதன் வடக்கு மற்றும் கிழக்கு பக்கங்களில் பெரிய அகலமான எல்லையை கொண்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்