66 ஆண்டுகளாக நகங்களை வளர்த்த நபர்: முதன் முறையாக அகற்ற முடிவு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
93Shares
93Shares
lankasrimarket.com

இந்தியர் ஒருவர் கடந்த 66 ஆண்டுகளாக நகம் வெட்டாமல் கின்னஸ் சாதனை படைத்த நிலையில், இன்று அமெரிக்காவில் நகம் வெட்ட உள்ளார்.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால்(88). இவர் கடந்த 1952ஆம் ஆண்டு முதல் தனது இடது கையில் நகத்தை வெட்டாமல் வளர்க்க ஆரம்பித்தார்.

இதன் விளைவாக 66 ஆண்டுகளில் இவரது நகங்கள் 909.6 செண்டி மீற்றர் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதில் கட்டை விரலில் உள்ள நகத்தின் வளர்ச்சி மட்டும் 197.8 செண்டி மீற்றர் ஆகும்.

இதனைத் தொடர்ந்து, உலகிலேயே ஒரு கையில் மிக நீளமான நகத்தை கொண்டவர் என்ற சாதனையை ஸ்ரீதர் படைத்ததால், 2016ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.

அமெரிக்காவின் பிரபலமான 'Ripley's Believe It or Not!' எனும் தொலைக்காட்சி தொடர், உலகில் அதிசயமான செயல்கள் மற்றும் சாதனைகள் புரிந்தவர்களின் பதிவுகளை ஒளிப்பரப்பி வருகிறது.

இந்த தொடருக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் அலுவலகம் ஒன்று, நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஆச்சரியப்பட வைக்கும் அரிய வகை பொருட்களை சேமித்து வகைக்கு அருங்காட்சியகமும் உள்ளதை அறிந்த ஸ்ரீதர், தான் பேணிக்காத்து வந்த நகத்தை இதில் வைத்து அழகு பார்க்க விரும்பினார்.

அதற்காக நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெற்றார். அதனைத் தொடர்ந்து, தன்னுடைய நகத்தை வெட்ட முடிவு செய்துள்ளார் ஸ்ரீதர். இன்று அமெரிக்காவுக்கு சென்றுள்ள அவர், பல கமெராக்களின் முன்னிலையில் 66 ஆண்டுகாலமாக வளர்த்து வந்த நகத்தை துறக்க உள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்