ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமி மணப்பெண் தோழியாக வந்த நெகிழ்ச்சி தருணம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
68Shares
68Shares
lankasrimarket.com

கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்கை சேவரன் என்ற சிறுமி தனது ஒரு வயதிலேயேJuvenile myelomonocytic leukemia என்ற ரத்தபுற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

3 வயதாகியுள்ள இச்சிறுமிக்கு எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதையடுத்து, ஹேடன் ஹாட்பீல்ட் ரைல்ஸ் என்ற பெண் தனது எலும்பு மஜ்ஜையை தானமாக அளித்தார்.

இதனால் சிறுமிக்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது மட்டுமல்லாமல் சுத்தமான இரத்தமும் கிடைத்தது, இந்நிலையில் ஹேடன் தனது திருமணத்திற்கு சிறுமியை அழைத்திருந்தார்.

ஹேடன் மற்றும் அட்ரியன் திருமணத்தில் ஸ்கை மணப்பெண் தோழியாக வலம் வந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் அனைவரையும் நெகிழ வைத்தது.

அந்த இடத்தில் இருந்த அனைவரின் கண்களும் கண்ணீரால் நிறம்பியது என திருமணத்தை புகைப்படம் எடுத்த ஜென்னி தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்