தாய்லாந்து குகையில் சிக்கியவர்களை மீட்க உதவிய இந்தியர்கள்: நன்றி தெரிவித்த தாய்லாந்து அரசு

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
78Shares
78Shares
lankasrimarket.com

மூன்று வாரங்கள் குகைக்குள் சிக்கியிருந்த 13 பேரை மீட்ட செய்தி உலகம் முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மீட்பு நடவடிக்கையில் இரண்டு இந்தியர்களின் பங்கும் இருப்பது தெரியவந்துள்ளது.

குகைக்குள் சிக்கியவர்களை மீட்பதில் மழையும் வெள்ளமும் பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தின.

அந்த இடத்தில்தான் இந்த இரண்டு இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமாக உதவியது. தாய்லாந்து அரசு Kirloskar Brothers Limited என்னும் பம்ப் தயாரிப்பு நிறுவனத்தை அணுகியது.

அந்நிறுவனம் மீட்புப் பணியில் உதவ அனுப்பியவர்களில் இந்தியாவின் Sangliயைச் சேர்ந்த Prasad Kulkarniயும் Puneயைச் சேர்ந்த Shyam Shukla என்பவரும் பங்கு பெற்றனர்.

அவர்களது பணி, 4 கிலோமீற்றர் நீள குகையிலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதாகும், இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் மீட்புப் பணி நடைபெறும் நேரம் முழுவதுமே தொடர்ந்து மழை பெய்து நீர் மட்டம் தொடர்ந்து பெருகிக் கொண்டே இருந்ததுதான்.

90 டிகிரி கோணத்தில் வளைவுகளைக் கொண்ட குகைப்பாதை, தொடர் மழையால் பெருகும் நீர் மட்டம், ஜெனரேட்டர் பிரச்சினையால் சிறு பம்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம், இருட்டு, வழுக்கும் பாதை, ஸ்கூபா டைவர்கள் கூட போக முடியாத நில அமைப்பு என பல தடைகளை தாண்டி மீட்புக் குழுவினர் குகையில் சிக்கியவர்களை சென்றடைய தண்ணீரை பம்ப் செய்ய வேண்டியது அத்தியாவசியமாயிற்று.

அதனால்தான் மீட்புப் பணி முடிந்ததும் இந்தியாவுக்கான தாய்லாந்து தூதர் Chutintorn Gongsakdi, தனது ட்விட்டர் செய்தியில் இந்தியாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்