டிவி நேரலையில் ஆண் செய்தியாளரை விடாமல் துரத்தி முத்தமிட்டது ஏன்? வீடியோ குறித்து விளக்கமளித்த பெண்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
304Shares
304Shares
lankasrimarket.com

தென்கொரியாவில் ஆண் செய்தியாளருக்கு இரண்டு பெண்கள் தொடர்ந்து முத்தமிட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக தென் கொரியாவில் நேரலையில் ஆண் நிரூபர் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது, இரண்டு பெண்கள் மாறி மாறி அவருக்கு முத்தம் கொடுத்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த செய்தியாளர், நேரலையில் சிரித்துக் கொண்டே அந்த காட்சியை கடக்க முயற்சிக்கிறார்.

ஆனாலும், அந்த பெண்கள் அவரை விடாமல் துரத்தி கன்னத்தில் முத்தமிட்டு அநாகரியமான செயலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான காட்சி நேரலையில் ஒளிபரப்பாகின. அதைத் தொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதால், இந்த சம்பவம் குறித்து அந்த ஆண் செய்தியாளர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக பதிவேற்றம் செய்திருந்தார்.

ஒரு அழகான ஆண் செய்தியாளரை நேரில் கண்டதும் அவருக்கு முத்தம் கொடுத்ததாகவும் இதில் எந்தவித தவறான எண்ணமும் இல்லை என்று இந்த செயலில் ஈடுப்பட்ட பெண்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்